கவிதைமணி

நெல்லுக்கிறைத்த  நீர் : கே. நடராஜன்

கவிதைமணி

தண்ணீர் விட்டா வளர்த்தோம்  நம் சுதந்திர செடியை  ?
கண்ணீரும்  செந்நீரும் விட்டு வளர்த்த கொடி மரமல்லவா அது !
கேட்க  முடியுமா நம் முன்னோரிடம் அந்த கொடியின் விலை என்ன என்று ?
விலை மதிப்பில்லா சுதந்திரக் காற்று சுவாசிக்கும் நாம்  விலை வைத்து 
விட்டோமே  குடிக்கும் நீருக்கும் , குழந்தைகள் படிக்கும் படிப்புக்கும் !
விலை இல்லா பொருள் கொடுத்து  எனக்கும், உனக்கும், எவருக்கும் 
ஒரு விலை உண்டு என்று சொல்லிவிட்டதே  நம்  அரசியல் 
கட்சிகள் !  விலை  மதிப்பில்லா நேர்மைக்கே ஒரு சோதனை காலம் இது !
நிலைமை கண்டு துவள வேண்டாம்  தம்பி ...நீ ! சோதனை பல 
கண்டாலும் சாதனை புரிய காத்திருக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று !
எடுக்க வேண்டும் ஒரு உறுதிப்பாடு  நீ  இன்று...
"என் முன்னோர் செய்த தியாகம்  விழலுக்கு இறைத்த நீர் அல்ல ...
 அது நெல்லுக்கு இறைத்த நீரே   அன்றும் ,இன்றும், என்றும் ! ...என் தேசம் என்
 சுவாசம் !
 எதற்கும் விலை போகாமல் நான் காண்பேன்  ஒரு புதிய பாரதம் "
தடைக் கற்கள் யாவும் உனக்கு படிக்கற்கள் ஆகும் ...புதிய 
பாரதமும்  பொலிவுடன் மலரும் ஒரு வல்லரசாக ...!
நாளை உனதே தம்பி ! நாளைய பாரதமும் உன்னை நம்பிதான் தம்பி  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT